விம்பிள்டன் 2022: செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி

விம்பிள்டன் 2022: செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி
X
Serena Williams News - விம்பிள்டன் 2022: பரபரப்பான முதல்-சுற்றுப் போட்டியில், 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், உலகின் நம்பர் 115 ஹார்மனி டானிடம் தோல்வி .

Serena Williams News -கடந்த ஆண்டு விம்பிள்டனில் தனது முதல் சுற்று ஆட்டத்தின் போது காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.

23 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், சாம்பியன்ஷிப்பில் 7 முறை வென்றவருமான செரீனா இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் 115 வீராங்கனை ஹார்மனி டானுக்கு எதிராக ஆட்டத்தில் 5-7, 6-1, 6-7 (7) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

40 வயதான அவர் மெதுவாக, ஆனால் சீராக விளையாடினார். தொடக்க செட்டை இழந்த செரீனா மீண்டும் எழுச்சி பெற்று இரண்டாவது செட்டில் ஹார்மனியை ஸ்டைலாக வீழ்த்தினார். கடைசி செட்டில் ஒரு மேட்ச் பாயிண்டைச் சேமித்து, டை-பிரேக்கருக்கு கொண்டு சென்றார். டை-பிரேக்கரில் அவர் 4-0 என முன்னேறினாலும், இறுதியில் தோல்வியை தழுவினார்.இந்த போட்டி 3 மணிநேரம் 10 நிமிடங்கள் நீடித்தது.

அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்கக் கூடியிருந்த அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தார். செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டனில் உலக நம்பர் 115-வது இடத்தில் உள்ள பிரான்சின் ஹார்மனி டானிடம் தோல்வியடைந்தாலும், முகத்தில் புன்னகையுடன் சென்டர் கோர்ட்டிலிருந்து வெளியேறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு