மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நவீன மைதானத்தில் நடைபெறுமா?
காளையை அடக்க முயலும் வீரர்கள் (கோப்பு படம்)
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீர விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடங்கும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
அதுவும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு களிக்கும் வகையில் தங்களது பயணத்திட்டத்தை ஆண்டுதோறும் அமைத்துக்கொள்வதும் உண்டு.
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாயில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனைகளுக்கு பிறகு ஆட்சியர் சங்கீதா கூறியிருப்பதாவது:-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 6 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கமாக நடக்கும் இடத்திலேயே இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டுக்கு என தனி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.இங்கு ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து போட்டிகளை பார்வையிட வசதியாக உள்ளது. இந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்துவிட்டன. கடந்த மார்ச் மாதம் இந்த அரங்க கட்டுமான பணிகள் தொடங்கின. 9 மாதங்களில் இவை சூப்பராக கட்டப்பட்டுள்ளன. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அது போல் காளைகளை கட்டி வைப்பதற்கான இடமும் அமைக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்து வாடி வாசலுக்கு காளைகள் வரிசையாக அழைத்து வரப்படும். இங்கு நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் இது ஒரு பொது மைதானம். இங்கு ஆண்டுதோறும் கபடி, ஃபுட்பால் போன்ற போட்டிகள் எல்லாம் தொடர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu