4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா சென்னை அணி

4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா சென்னை அணி
X

ஐபிஎல் இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 முறையாக கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்துடன் களம் இறங்குகிறது சென்னை சிஎஸ்கே அணி.

டெல்லி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே நடந்த குவாலிஃபையர் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


துபாயில் நாளை இரவு இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சிஎஸ்கே அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகிறது.

லீக் போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு முறை சென்னை அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி வெற்றிப் பெற வேண்டும் என்கிற நோக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்குகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுரை 8 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் 3 முறை கேப்டன் தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை பிடித்துள்ளது. 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை பிடிக்க வேண்டு என்கிற நோக்கில் சென்னை அணி களம் இறங்குகிறது.

கேப்டன் டோனி குவாலிஃபையல் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிப் பெற பெரிதும் காரணமாக இருந்தார். அவர் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார்.


கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கோடு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி களம் இறங்குகிறது.


இறுதி போட்டியில் வெல்லப் போவது யார் என்கிற கேள்வி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை சென்னை சிஎஸ்கே அணி இரண்டாவது பேட்டிங்கில் களம் இறங்கி வெற்றி பெற்று வந்துள்ளது.

அதுபோல கொல்கத்தா அணியில் கேப்டன் இயான் மோர்கன் தலைமையில், சிறந்த பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் இறுதி போட்டிக்குள் நுழைந்ததும் சேசிங் செய்துதான் என்பது குறிப்பிட தக்கது.

இந்த போட்டியை பொறுத்தவரை நாளை டாஸ் வெல்வதும் கூட, ஒரு அணியின் வெற்றிக்கு காரணமாக அமையவுள்ளது. இந்த போட்டி நாளை இரவு துபாயில் நடக்க உள்ளது.

Tags

Next Story