குட் நியூஸ் சிஎஸ்கேயன்ஸ்! அவரும் வரார் இவரும் வரார்... இந்த வருசம் கப் நம்மள்து!

காயத்தால் அவதிப் பட்டு வரும் வீரர்களில் இருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவதால் இந்த வருடம் கப் நம்மள்துதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக சென்னை மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சென்னை மைதானத்தில் சிஎஸ்கே போட்டிகள் நடத்தப்படுவதால் ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி ஒழுங்காக விளையாடாமல் 9வது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த முறை நிச்சயம் கப் அடிக்க வேண்டும் என உறுதியுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மேலும் இதுதான் தோனியின் கடைசி சீசன் எனவும் பேச்சு எழுந்துள்ளது. இதனால் நிச்சயமாக மற்ற வீரர்களின் பங்களிப்புடன் இந்த முறை சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றும் என்று கணிக்கப்படுகிறது.
இது மட்டுமே சென்னை அணி கோப்பையை கைப்பற்றும் என்று கணிப்பதற்கு காரணம் அல்ல. கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இரு முக்கிய வீரர்கள் இம்முறை களம் இறங்குகிறார்கள். மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் இம்முறை தொடர் முழுக்க விளையாட முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக அவர் இருப்பார் என நம்பப்படுகிறது.
கடந்த முறை சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே தீபக் சஹார் விளையாடாததுதான் என்று பலரும் கூறிவந்தனர். மேலும் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகி இருந்த ருத்ராஜ் கெய்க்வாட்டும் திரும்பி வந்துள்ளார். இருவரும் தங்கள் முழு உடல் தகுதியை எட்டிவிட்டதாகவும் இந்த சீசனில் விளையாடுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த சீசனில் காயம் காரணமாக ஜடேஜா பல போட்டிகளில் ஒழுங்காக விளையாடவில்லை. இம்முறை பயங்கர பாஃர்மில் இருக்கிறார். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் ஜொலிப்பார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என கிட்டத்தட்ட அனைவருமே மிகத் திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது சிஎஸ்கே அணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu