அஸ்வினை டெஸ்டிலிருந்து நீக்கும் போது கோலியை டி20 போட்டிகளில் இருந்து ஏன் நீக்க கூடாது?: கபில்தேவ்

அஸ்வினை டெஸ்டிலிருந்து நீக்கும் போது கோலியை டி20 போட்டிகளில் இருந்து ஏன் நீக்க கூடாது?: கபில்தேவ்
X

விராட் கோலி மற்றும் கபில்தேவ் (கோப்புப்படம்)

திறமையானவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், இந்திய அணிக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறினார்

450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் அணியின் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும்போது, தற்போது சரியாக விளையாடாத விராட் கோலியையும் டி20 போட்டிகளில் நீக்கக்கூடாதா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

கோலி இப்போது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை, இந்திய அணி நிர்வாகம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், இந்திய அணிக்கு அது தீங்கு விளைவிக்கும் என்று கூறினார்.

இது குறித்து கபில் கூறுகையில், இப்போது நீங்கள் டி20 ஆடும் பதினொன்றில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளர் அஷ்வினை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கும்போது, ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனையும் நீக்கலாம். என்று கூறினார்.

கோலி தற்போது தனது பழைய சாயலின் நிழலைப் போல் காட்சியளிக்கிறார் என்று கூறுவதற்கு கபில் தயங்கவில்லை.

நாம் பார்த்த அளவில் பல ஆண்டுகளாக கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் தனது ஆட்டத்தால் சிறப்பாக பெயர் பெற்றார் என்பது உண்மைதான், ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை எனும்போது, திறமையான இளைஞர்களை அணியிலிருந்து விலக்கி வைக்க முடியாது, "என்று கூறினார்.

நட்சத்திர வீரர்களுக்கு சவாலாக இருக்கும் இளைஞர்களை அணியில் சேர்த்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்க வேண்டும். இந்த இளைஞர்கள் முயற்சி செய்து கோலியை விஞ்ச வேண்டும் என்ற நேர்மறையான அர்த்தத்தில் அணியில் இளைஞர்களுக்கான போட்டியை நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டியில் கோலிக்கு "ஓய்வு" அளிக்கப்பட்டால், அது "நீக்கப்பட்டதாக" கருதப்படும் என்று கபில் கருதுகிறார்.

"நீங்கள் அதை ஓய்வு என்று அழைக்கலாம், வேறு யாராவது அதை நீக்கப்பட்டதாக கூறுவார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பார்வை இருக்கும். வெளிப்படையாக, தேர்வாளர்கள் கோலியை தேர்வு செய்யவில்லை என்றால், அது அவர் சரியாக விளையாடாததால் இருக்கலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

ப்ளேயிங் லெவன் தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அன்றி கடந்தகால சாதனைகளை வைத்து அல்ல. நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருக்கலாம், ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் சரியாக ஆடாவிட்டாலும் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அர்த்தமல்ல என்று அவர் மேலும் கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!