இந்தியாவின் பெயரை மாற்றுங்கள்... வீரேந்திர சேவாக் கோரிக்கை
இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுக்க இந்த விசயங்கள் கடந்த 2 நாட்களாக வைரலாகும் நிலையில், அதற்கு முன்னதாக செப்டம்பர் 2 ம் தேதியே இப்படி ஒரு டிவீட்டை வெளியிட்டுள்ளார் சேவாக்.
செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்டு பதிவிட்டிருந்த சேவாக்கிற்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள சேவாக், "நாட்டின் பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதத்தை சேர்ந்தவர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். நமக்கான உண்மையான பெயர் 'பாரத்' . அதனை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது" என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 02ம் தேதி, ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் 'பாரத குடியரசுத்தலைவர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது, இந்தியாவின் பெயர் மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu