அடுத்தடுத்து சாதனைகள் படைத்த கோலி! சச்சின் சாதனை முறியுமா?

அதிவேகமாக 13 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. தனது 47வது சர்வதேச சதத்தையும் அடித்து சாதனை.
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் மற்றும் 47 வது சதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார் விராட் கோலி.
இந்தியா 147 ரன்களுடன் 25 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது.
இருவரும் ஆரம்பத்தில் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆடுகளத்தை நன்கு உணர்ந்த கே எல் ராகுல் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். கே எல் ராகுல் அதிரடியாக ஆடியதால் விராட் கோலி அவருக்கு பக்கபலமாக ஆடத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய விராட் கோலி, கே எல் ராகுலையும் ஓவர்டேக் செய்து அதிரடி ஆட்டத்துக்கு கியரை மாற்றினார். சிக்ஸர்கள், பவுண்டரிகள். 2 ரன்கள், சிங்கிள் என அதிரடியாக ஸ்ட்ரைக் ரொடேட் செய்து 27 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதம் ஆகும்.
இந்த சதம் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். 321 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் தான் முன்னர் இந்த சாதனையைப் பிடித்திருந்தார்.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 267 இன்னிங்சில் 13,240 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 65 அரைசதங்கள், 47 சதங்கள் விளாசியுள்ளார்.
இந்த சாதனைகள் மூலம், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடத்தக்க சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். இதுமட்டுமின்றி வரும் உலக கோப்பைத் தொடருக்குள் சச்சின் சாதனையை அதிரடியாக முறியடித்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் மிகப் பெரிய ஜாம்பவான் வீரராக உருவெடுக்க இருக்கிறார் விராட் கோலி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu