கண்டுக்காமல் சென்ற கோலி... அவமானப்பட்ட கங்குலி! பெங்களூருவில் நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த நேரத்தில் விராட் கோலியும் கங்குலியும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால்...
அங்கு என்ன நடந்தது தெரியுமா?
கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும், மேலும் பல மறைமுகமான அழுத்தங்களைக் கொடுத்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. விராட் கோலியும் சில விசயங்களை நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கங்குலிக்கும் விராட் கோலிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது விராட் கோலியும், கங்குலியும் மைதானத்தில் சந்திக்கும் சூழலில் விராட் கோலி அவரை கண்டுகொள்ளாமல் சென்றதால் நோஸ் கட் ஆனது. இதனை விராட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
கங்குலி இப்படி அசிங்கப்பட வேண்டும். இதனால்தான் கிங் கோலியை பகைக்க கூடாதுன்னு சொல்றது என கர்நாடகா ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
வரிசையாக அனைவரும் கை கொடுத்துக் கொண்டே வந்தனர். அப்போது விராட் கோலி பாண்டிங்கு கை கொடுத்துவிட்டு பின்னால் வந்த கங்குலியை வேண்டுமென்றே நிராகரித்தது போல இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் விராட் கோலி. அதன்பிறகு பேசிய அவர், எனக்கு நான் அவுட் ஆன முறை பிடிக்கவில்லை. ஏமாற்றமாக உணர்கிறேன். ஃபுல்டாஸ் பந்தில் அவுட் ஆனது சரியில்லை. 175 ரன்கள் அடித்தபோதே இந்த ஆடுகளத்துக்கு இது போதும் என்று கணித்து நான் தெரிவித்திருந்தேன்.
நான் பாஃர்மில் இருக்கும்போது நல்ல பந்துகளை கூட பவுண்டரிகளுக்கு அடித்து விடுவேன். அப்படி செய்தால் அது பந்துவீச்சாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தும். இரண்டு போட்டிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu