ஐபிஎல் தொடரில் அதிக சதம்... கெய்ல் சாதனையை முறியடித்த கோலி!

ஐபிஎல் தொடரில் அதிக சதம்... கெய்ல் சாதனையை முறியடித்த கோலி!
X
ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை பெற்றிருந்தவர் கிறிஸ் கெய்ல். தற்போது இந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார் விராட் கோலி. 7 சதங்களுடன் முதலிடத்தில் விராட்டும் 6 சதங்களுடன் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத்துடன் மோதி வெற்றி பெற்றிருந்தால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். விராட் கோலி சதமடித்தும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக திட்டமிடாமல் பந்து வீசி வெற்றியை தூக்கி கொடுத்துவிட்டனர்.

இந்த முறையும் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற முடியாததால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் விராட் கோலி புதிய சாதனையைப் படைத்திருப்பதுதான். அவர் நேற்று அடித்த சதத்துடன் மொத்தமாக 7 ஐபிஎல் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இதுவரை கிறிஸ் கெய்ல்தான் அதிக சதங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவர் மொத்தம் 6 சதங்கள் அடித்து இந்த சாதனையைப் படைத்திருந்தார். இந்த ஆண்டு ஏற்கனவே கடந்த ஆட்டத்திலும் விராட் கோலி சதமடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் சதமடித்து கெய்லின் சாதனையை முறியடித்தார். மொத்தமாக 237 ஆட்டங்களில் ஆடியுள்ள விராட் கோலி 7 சதங்களும் 50 அரை சதங்களும் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 142 ஆட்டங்களில் ஆடி 6 சதங்களும் 31 அரைசதங்களும் அடித்திருக்கிறார்.

ஜோஸ் பட்லர் இதுவரை 96 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார். அதில் 5 சதங்களும் 19 அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

கேஎல் ராகுல் 118 ஆட்டங்களில் ஆடி 4 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

டேவிட் வார்னர் இந்த பட்டியலில் 5 வது இடத்திலிருக்கிறார். அவரும் 4 சதங்களும் 61 அரைசதங்களும் அடித்திருக்கிறார்.

Tags

Next Story