ஒரே போட்டியில் அட்டகாசமான 3 சாதனைகள்..! கலக்கிய விராட் கோலி!

டெல்லி அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி வீரர் விராட் கோலி இன்றைய போட்டியில் 3 மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய நாள் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் விராட் கோலி 3 சாதனைகளை படைத்ததோடு இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினாலும் அவர் 3 சாதனைகளைக் கடந்திருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதால் ஐபிஎல் தொடரின் பவர்ப்ளேயில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்தார். விராட் கோலி இதுவரை 2220 ரன்கள் பவர் ப்ளேயில் அடித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகள் அனைத்திலும் 11 ஆயிரத்து 500 ரன்கள் அடித்துள்ளார் விராட் கோலி. இதில் ஐபிஎல்லில் மட்டும் 6819 ரன்கள் அடித்திருக்கிறார். பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மட்டும் 2510 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் விராட் கோலி. இது அவரது 47வது அரைசதமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu