விராட் கோலி மீண்டும் சதம்! பாகிஸ்தான் பந்துவீச்சு துவம்சம் !

விராட் கோலி மீண்டும் சதம்! பாகிஸ்தான் பந்துவீச்சு துவம்சம் !
X
கே எல் ராகுலைத் தொடர்ந்து விராட் கோலியும் சதமடித்து அசத்தினார்.

கே எல் ராகுல் சதமடித்ததை தொடர்ந்து விராட் கோலியும் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். துவக்க விக்கெட்டுக்கு இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டே 17வது ஓவரில்தான் இழந்தது.

சதாப் கான் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த ரோஹித் சர்மா அதனை பகீம் அஷ்ரப் கையில் கொடுத்து அவுட் ஆனார். அவர் 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

18வது ஓவரில் சுப்மன் கில் ஷகீன் அப்ரடி பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

அடுத்ததாக விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே எல் ராகுல். இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

ரிசர்வ் டே ஆட்டம்

நிறுத்தப்பட்ட அதே இடத்தில் துவங்கியது இன்றைய ஆட்டம். ரிசர்வ் தினமான இன்று விராட் கோலி, கேஎல் ராகுலுக்கு சிறந்த நாளாக அமைந்தது.

இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இவர்களது விக்கெட்டை எடுக்க பாகிஸ்தான் வீரர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும் விக்கெட் விழவில்லை.

மிக விரைவாக ஆடிய விராட் கோலி கே எல் ராகுலுக்கு ஆட்டத்தை கொடுத்து வந்தார். கே எல் ராகுல் தனது 6 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சற்று நேரத்தில் விராட் கோலியும் அதிரடியாக சதமடித்தார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்து மிக கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

Tags

Next Story
ai healthcare products