காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் ஆடிய வெங்கடேஷ் ஐயர்! வைரலாகும் வீடியோ!

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் ஆடிய வெங்கடேஷ் ஐயர்! வைரலாகும் வீடியோ!
X
கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரம் வேத பாட சாலையில் மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் கிரிக்கெட் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023 தொடர் மே மாத இறுதியில் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனியின் அட்டகாசமான கேப்டன்ஷிப் வெற்றிக் கோப்பையைப் பெற அணியினருக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது.

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் இருந்த கொல்கத்தா அணி, துரதிஷ்டவசமாக வெளியேறியது. அந்த அணியில் வெங்கடேஷ் என்ற தமிழக வீரர் அற்புதமாக ஆடி பலரின் கவனத்தையும் பெற்றார். அபாரமான செஞ்சுரியும் 2 அரை சதங்களும் பல ஆட்டங்களில் நல்ல ரன்களையும் பெற்று மொத்தம் 404 ரன்கள் எடுத்திருந்தார்.

பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தாவுக்கு ஆடியபோது சதமடித்திருந்த நிலையில் அவருக்கு பிறகு கொல்கத்தா அணிக்காக சதம் அடித்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ் தற்போது காஞ்சிபுரத்தில் தனது விடுமுறையைக் கழித்து வருகிறார். இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று கிரிக்கெட் குறித்து பேசியும் கிரிக்கெட் ஆடியும் வருகிறாராம். அந்த வகையில் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு மடத்தில் இயங்கு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இளம் வேத பாட சாலை எனும் பெயரில் இயங்கி வரும் அந்த பாடசாலையில் அவர் ஆடிய காட்சியை படமெடுத்து தனது இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!