இந்திய அணியில் 3வது முறையாக தேர்வு: வாய்ப்பை தக்கவைப்பாரா? வருண் சக்கரவர்த்தி!

இந்திய அணியில் 3வது முறையாக தேர்வு: வாய்ப்பை தக்கவைப்பாரா? வருண் சக்கரவர்த்தி!
X

தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் 3வது முறையாக தேர்வாகியுள்ளார்..

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. இவர் 2020ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கு இந்திய அணி வீரராக தேர்வானார். இந்த போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விலக நேரிட்டது.

இதன்பிறகு இங்கிலாந்து டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது பிசிசிஐ நடத்திய உடல் தகுதி சோதனையில் தோல்வியடைந்ததன் மூலம் 2வது வாய்ப்பையும் நழுவவிட்டார்.

இந்தநிலையில் இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக அவர் 3வது முறையாக இந்திய அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இந்தமுறை அவர் வெளியேறாமல் தகுதிகளை வளர்த்து திறமையாக விளையாட வேண்டும் என்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!