சுவாரஸ்யம்...! ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த ரெண்டு ஆப்கானிஸ்தான் அணிகள்!

கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டு ஆண்களுக்கான தேசிய அணிகள் இரண்டு தொடர்களில், இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்ததைதான் இந்த கட்டுரை விவரிக்கிறது. இது ஒருவகையில் ஒரு அரிய சம்பவம் ஆகும். காரணம் ஒரு நாட்டுக்கு ஒரு அதிகாரப்பூர்வ அணிதான் இருக்கும். சில நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு வடிவத்துக்கு தக்கவாறு டி20 அணி, டெஸ்ட் அணி என்று வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு நாட்டுக்காக இரண்டு அணிகள் பெரிய தொடர்களில் ஆடியது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய 2023 உலகக்கோப்பை தொடர் பெரிய விளம்பரங்களின்றி நடைபெற்ற வந்த அதே தேதிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆசியாவிலிருந்து கிளம்பிய அத்தனை அணிகளும் உலகக் கோப்பையிலும் விளையாட தகுதி பெற்றிருந்தன.
அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி அக்டோபர் 7 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில் ஆசிய கிரிக்கெட் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் கலந்து கொண்டன. இந்த ஐந்து அணிகளும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கின்றன.
இரண்டில் உலக கோப்பைதான் முக்கியம் என நினைத்த அனைத்து நாடுகளும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட பெஸ்ட் வீரர்களை வைத்துவிட்டு இரண்டாம் கட்ட வீரர்கள் அனைவரையும், ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடருக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்தன.
இருப்பதிலேயே இந்தியா சார்பில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில் ஆன அணிதான் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிரம்பிய அணியாக இருந்தது. இந்திய அணிக்கு முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அரையிறுதிப் போட்டிகள் துவங்கின. இந்த போட்டிகளில் ஒன்றில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது. அதே நாளில் பாகிஸ்தானின் மற்றொரு அணி பாபர் அசாம் தலைமையில் உலகக்கோப்பையில் விளையாடி வந்தது.
ஆசிய விளையாட்டில் அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அதே நேரத்தில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தது. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் இரண்டு அணிகள் வெவ்வேறு போட்டித் தொடர்களில் ஒரே நேரத்தில் ஆடியது இதுவே முதல் முறை.
அதற்கு அடுத்த நாளே ஆப்கானிஸ்தான் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடரில் இறுதிப் போட்டியில் ஆடியது. இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக, ஆடியது. இதே நேரத்தில்தான் உலகக்கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையே போட்டி துவங்கியது, இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் இரண்டு அணிகள் வெவ்வேறு போட்டித் தொடர்களில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்தது இதுவே முதல் முறை. ஒரே நேரத்தில் (ஒரு போட்டியில் பந்து வீச்சு, இன்னொரு போட்டியில் பேட்டிங்) இரண்டு தொடர்களில் ஆடிய சாதனை பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களில் பேட்டிங் ஆடிய சாதனை கிடைத்துள்ளது.
முன்னதாக உலககோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க இருந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியாவின் இன்னொரு அணி பங்கேற்றிருந்தது. ஆனால் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags
- Afghanistan cricket world cup 2023
- bangladesh vs afghanistan live
- bangladesh vs afghanistan live score
- bangladesh vs afghanistan world cup 2023 live
- bangladesh vs afghanistan live streaming
- bangladesh vs afghanistan live score 2023
- bangladesh vs afghanistan world cup 2023 live match
- bangladesh vs afghanistan world cup 2023 live streaming
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu