இப்படியா அவுட் ஆகனும்? கொஞ்சம் கூட இஷான் கிஷனுக்கு அதிர்ஷ்டம் இல்லை

இப்படியா அவுட் ஆகனும்? கொஞ்சம் கூட இஷான் கிஷனுக்கு அதிர்ஷ்டம் இல்லை
X
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார்.

மும்பை ஐபிஎல் 15வது சீசனில் லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனுக்கு 15 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி வாங்கியது. இதில் இஷான் கிஷன் 8 போட்டியில் விளையாடி 199 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார்.


ஆனால் தொடர்ந்து அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இஷான் கிஷன் திணறி வருகிறார். சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கூட டக் அவுட்டாகி வெளியேறினார். இன்றைய ஆட்டத்திலும் இஷான் கிஷன் ரன் குவிக்க தடுமாறினார். 20 பந்துகளை சாப்பிட்ட அவர் 8 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதில் ஒரு பவுண்டரி கூட இல்லை.

அப்போது ரவி பிஸ்னாய் வீசிய ஓவரை பிடித்த இஷான் கிஷன், பந்தை அடித்த போது, அது நேராக விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் காலில் பட்டு, எகிறி, ஸ்லிப்பில் நின்ற ஹோல்டரிடம் பிடிப்பட்டது. இதற்கு மூன்றாம் நடுவரின் உதவி நாடப்பட்டது. இதில் பந்து தரையில் படாததால் இஷான் கிஷன் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டார்.


இதனால் இஷான் கிஷனுக்கு கொஞ்சம் கூட லக் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மும்பை அணிக்கு இது போதாத காலம் என்பதால் தான் இப்படி நடப்பதாகவும் அந்த அணி ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், கேஎல் ராகுலோ செம ஃபார்மில் உள்ளார். ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் தான், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இஷான் தற்போது தவித்து வருகிறார் கேஎல் ராகுலோ சதங்களை விளாசி வருகிறார். ஒரே அணிக்கு எதிராக அதிக முறை சதம் விளாசிய வீரர், மும்பைக்கு எதிராக 3 சதம் விளாசிய வீரர் என்று பல சாதனையை இன்றைய ஆட்டத்தில் ராகுல் படைத்துவிட்டார். சஞ்சு சாம்சன், ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இஷான் கிஷனின் இந்திய அணி இடம் அவ்வளவு தான்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!