திருச்சி மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கையுந்து பந்து இறுதி போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமும் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான கையுந்து பந்து போட்டியை நடத்தின. கடந்த 12 மற்றும் 13 ம்தேதிகளில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றது.
மாணவர்கள் பிரிவில் 20 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டன. 13/7/2024 மாலை 4 மணி அளவில் நடந்த இறுதி போட்டியை சர்வதேச கையுந்து விளையாட்டு வீரர் நடராஜன் (ஐஓபி மேலாளர்) தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கான இறுதிப் போட்டியில் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி அணியும், அரசு உயர்நிலைப்பள்ளி பூலாங்குடி அணியும் மோதின. இதில் முசிறி அமலா பெண்கள் பள்ளி அணி 25 -10 ,25 -16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும், எஸ் .எம். மேல்நிலைப்பள்ளி உறையூர் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி 24 26 ,25 -12 ,25 -18 என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடம் பெற்றது/
பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக செயலாளரும் முன்னாள் இந்திய கையுந்து பந்து விளையாட்டு வீரருமான கோவிந்தராஜன் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக தலைவர் முனைவர் தங்க பிச்சையப்பா தலைமை தாங்கினார். முனைவர் தர்மர் தலைவர் உடற்கல்வித்துறை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பி ராஜு அசோசியேட் டீன் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் அவர்களும், சதீஷ்குமார் அட்மின் ஆபீர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள்.இறுதியாக திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக பொருளாளர் சிவாஜி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu