இந்தியா Vs ஆஸ்திரேலியா - அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மென்!

தனிநபர் அதிகபட்சம் அடிக்க வேண்டும் என்றால் 215 ரன்களையாவது கடக்க வேண்டும். அப்படி இந்த தொடரில் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் வீரர் நம்ம விராட் கோலிதான். இவர் நிச்சயம் முதல் 5 இடங்களுக்குள் வருவார் என நம்பலாம்.
இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. முதல் போட்டி மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடக்கவுள்ளது.
இந்தியாவுடன் மோதும் ஆஸ்திரேலியா
டெஸ்ட் ரேங்கிங் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியுடன் மோத காத்திருக்கிறது. 29 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 115 புள்ளிகள் அடிப்படையில் இருக்கிறது. இந்த தொடரில் 3-1 அல்லது 4-0 எனும் கணக்கில் மொத்த ஆட்டங்களையும் வென்றால் இந்திய அணி முதல் இடத்தைப் பிடிக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை
வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் போட்டி மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி தரம்சாலாவிலும் மூன்றாவது போட்டி டெல்லியிலும் கடைசி போட்டி அகமதாபாத்திலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் அடித்த டாப் 5 பேட்ஸ்மென்களைப் பற்றி பார்க்கலாம்.
விவி எஸ் லட்சுமணன்
டெஸ்ட் பேட்ஸ்மென்களின் குரு, விவி எஸ் லட்சுமணன் தான் இந்த பட்டியலில் டாப்பாக இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இவர் குவித்த ரன்களே ஒரு இந்திய வீரர் அடித்த அதிக ரன்களாக இருக்கிறது.
தனி ஆளாக நின்று ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு தண்ணீர் காட்டிய வீரர் இவர். விவிஎஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 281 ரன்கள் விளாசி இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் வீரர்களின் கடவுள், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றால் அது சச்சின்தான். இவர் அறிமுகமான போட்டிகளிலிருந்தே டெஸ்ட், ஒருநாள் என பாரபட்சம் பார்க்காமல் தொடர்ந்து சாதனைகளைக் குவித்து வந்தார். பல போட்டிகளில் தனது திறமையைக் காட்டி எதிரணி வீரர்களின் பாராட்டையும் தட்டிச் சென்றுவிடுவார்.
2002-2003ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தன் போது சச்சின் தெண்டுல்கர் சொதப்பினார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பிய அவர், சிட்னியில் தான் யார் என்பதை காட்டினார். அந்த போட்டியில் அவர் 241 ரன்கள் குவித்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
ராகுல் டிராவிட்
இந்திய அணியின் சுவர் என சொன்ன உடனேயே ராகுல் டிராவிட்டின் பெயரை அனைவரும் உச்சரித்து விடுவோம். இப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் கடந்த 2002ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்டில் 233 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீரர்களை அலற விட்டார்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கதற, பீஃல்டிங் செய்து வந்தவர்கள் தளர்ச்சியடைந்த நிகழ்வும் நடைபெற்றது. இன்னும் எத்தனை பந்துதான் போடுறது என பவுலர்கள் மனதே வெறுத்துவிட்டனர். டிராவிட்டைக் கண்டாலே அவர்கள் அலறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்
தோனி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மென் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது நம்ம தோனி. கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இந்த நேரத்தில் 224 ரன்கள் அடித்து இந்திய அணியைக் காப்பாற்றினார் மகேந்திர சிங் தோனி.
தனிநபராக அதிக ரன்கள் அடித்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனிக்கு மட்டுமே இருக்கிறது.
மீண்டும் சச்சின்
5வது இடத்திலும் சச்சினே இருக்கிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 214 ரன்கள் விளாசினார்.
விராட் கோலி
தனிநபர் அதிகபட்சம் அடிக்க வேண்டும் என்றால் 215 ரன்களையாவது கடக்க வேண்டும். அப்படி இந்த தொடரில் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் வீரர் நம்ம விராட் கோலிதான். இவர் நிச்சயம் முதல் 5 இடங்களுக்குள் வருவார் என நம்பலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu