டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை
X

இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், அதே போல் இந்திய ஹாக்கி மகளிர் மற்றும் ஆடவர் அணியும் பதக்கத்தை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் சற்று முன்னர் மகளிர் வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் என்பவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் 64 மீட்டர் வட்டு எறிந்ததை அடுத்து அவர் இறுதிக்கு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து கமல்பிரீத் கவுர் உள்பட 12 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றில் நன்றாக விளையாடினால் பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் என்பவர் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரரிடம் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் தோல்வி அடைந்ததால் பதக்கும் பெறும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்திய வீரர் அமீத் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீரர் ஹெர்னே மார்டினஸிடம் தோல்வி அடைந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!