டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 400 மீ. தடை ஓட்டம்: நார்வே வீரர் உலக சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 400 மீ. தடை ஓட்டம்: நார்வே வீரர் உலக சாதனை
X

நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோல்ம்-பிரேஸிலின் அலிசன்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஓட்டப்பந்தயத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ஸ்டன் வார்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.



டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. தடை ஓட்டப்பந்தயத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ஸ்டன் வார்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். 400 மீ. தடை ஓட்டப்பந்தயத்தில் இரு வீரர்கள் உலக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளனர்.

கார்ஸ்டன் வார்ஹோல்ம் சமீபத்தில் 29 வருட சாதனையைத் தகர்த்தார். 400 மீ. தடை ஓட்டப்பந்தயத்தில் கெவின் யங் 46.78 நொடிகளில் தூரத்தைக் கடந்தது தான் கடந்த 29 வருடங்களாகச் சாதனையாக இருந்தது. அதனைத் தகர்த்து 46.70 நொடிகளில் கடந்தார் வார்ஹோல்ம். ஒரு மாதத்துக்கு முன்பு இது நடந்தது

இப்போது இன்னொரு உலக சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் அதே வார்ஹோல்ம். அவர் மட்டுமல்ல மற்றொரு வீரரும் சாதனை நேரத்தில் தூரத்தைக் கடந்து வெள்ளி வென்றுள்ளார்.


டோக்கியோவில் இன்று நடைபெற்ற 400 மீ. தடை ஓட்டப்பந்தயத்தில் வார்ஹோல்ம் 45.95 நொடிகளில் தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தத் தூரத்தை 46 நொடிகளுக்குள் கடந்த முதல் வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் 46.17 நொடிகளில் தூரத்தைக் கடந்து அவரும் பழைய உலக சாதனையைத் தாண்டியுள்ளார். பிரேஸிலின் அலிசன் வெண்லலம் வென்றார்.



Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil