32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்தது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 16 நாட்களாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 11,326 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில், 33 விளையாட்டில் 339 போட்டிகள் நடைபெற்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று 3 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளி, பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
39 தங்கத்துடன் அமெரிக்கா ( மொத்தம் 113 பதக்கங்கள்) முதலிடத்திலும், 38 தங்கத்துடன் சீனா (மொத்தம் 88 பதக்கங்கள்) இரண்டாமிடத்திலும், 27 தங்கத்துடன் ஜப்பான் (மொத்தம் 58 பதக்கங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளன.
இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 48வது இடத்தை பிடித்தது. மற்ற நாடுகள் முறையே பெற்ற தங்கப் பதக்கங்கள்: பிரிட்டிஷ் - 22, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி - 20, ஆஸ்திரேலியா - 17, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி தலா - 10, கனடா, பிரேசில் தலா - 7 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளன.
2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu