இன்றைய கூகுள் தேடுதல் பொறியினை அலங்கரிப்பவர் யார் தெரியுமா?
GoogleDoodle
பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை அறிமுகம் செய்து வைத்த சர் லுட்விக் குட்மன் 122 வது பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டிருக்குது.
ஜெர்மன் நாட்டில் 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி பிறந்த லுட்விக் குட்மன், மிகச் சிறந்த நரம்பியல் துறை நிபுணராக இருந்தவர். பாராலிம்பிக் விளையாட்டுகள் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டை அறிமுகம் செய்தவர்.
நாசி படைகளின் தாக்குதலின் போது ஜெர்மனியிலிருந்து வெளியேறி பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். பிரிட்டனில் 1943ஆம் ஆண்டு பாதுகாப்பு வீரர்களுக்கு முதுகெலும்பு காயங்களுக்கான சிகிச்சை மையத்தை குட்மன் தொடங்கினார். ஸ்டோக்-மாண்டேவில் மருத்துவமனையில் முதுகெலும்பு காயங்கள் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் லுட்விக் குட்மேன், முதுகெலும்பு காயங்களுடன் வரும் பாதுகாப்பு வீரர்களுக்கு சிகிச்சை அளித்தபோது, அவர்கள் படுத்தபடி பெரும் சிகிச்சையை விட, உடல் இயக்கத்தினால் பெறும் சிகிச்சை நல்ல பலனை அளிப்பதை சோதனையில் அறிந்து கொண்டு, அவர்களுக்கான சிகிச்சையில் விளையாட்டுகளை அறிமுகம் செய்தார். இதன் மூலம், பாதுகாப்பு வீரர்கள் தங்களை மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் சுயமரியாதையுடன் வாழவும் பேருதவி புரிந்தது.
முக்கிய சிறப்பு தினங்களில் அந்த நாளை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சர் லுட்விக் குட்மன் பிறந்த தினத்தன்று அவரது பணியை கௌரவிக்கும் வகையில் ஒரு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu