இந்தியா-நியூசிலாந்து 3 வது டி 20 போட்டி தொடரை வென்று கோப்பையை வெல்லுமா?

இரு அணி கேப்டன்களும் கோப்பையுடன் ( கோப்பு படம்)
today 3rd t20 match india vs new zealand
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் முதலாவது போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20போட்டியானது மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது.இந்த போட்டியில் இந்திய அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.
வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் சதமடித்து சாதனை படைத்தார். இப்போட்டியில் சதம்அடித்ததால் சர்வதேச டி20அரங்கில் ஒரு சீசனில் 2 சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரரானார் சூர்யகுமார் யாதவ்.இதுமட்டும்அல்லாமல் சர்வதேச டி20 அரங்கில் 2 அல்லது அதற்கு மேல் சதம் அடித்த 3வது இந்திய வீரரானார் சூர்யா. ஏற்கனவே நடந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் ரோகித் -4, ராகுல் -2 சதம் விளாசியுள்ளனர்.
today 3rd t20 match india vs new zealand
today 3rd t20 match india vs new zealand
இன்றும் அதிரடி தொடருமா?
இன்று நடக்க உள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இன்று நடக்கும் போட்டியிலும் சூர்யகுமார் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். சூர்யாவைப் பொறுத்தவரை பந்து யார் வீசுகிறார்கள் என்பது கேள்வியே அல்ல? பந்து எப்படி அவரை நோக்கி வருகிறது என்பதுதான் கேள்வி?- அந்த வகையில் எப்படி பந்து வீசினாலும் அதிரடி ஆட்டத்தோடுதான் களத்தில் உள்ளார். இந்திய அணிக்கு மகேந்திரசிங் தோனிக்கு பிறகு கிடைத்தபொக்கிஷம் இவர். தோனி இதுபோல்தான் பந்து வீசுபவரை பொருட்படுத்தவே மாட்டார். பந்து எப்படி வருகிறது என்பதில்தான் கவனமாக இருப்பார்.
நியூசிலாந்து நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் இன்றைய கடைசிப்போட்டியானது நடக்கிறது. இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இணைகிறாரா? என்பதும் அப்படி இணைந்தால் அவர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்துவார். மேலும் கேப்டன் பாண்ட்யா, தீபக்ஹீடா, மற்றும் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியிலும் நிதானமாக அதிரடி காட்டினால் இந்திய அணியானது கோப்பையை வெல்ல பெரும் வாய்ப்பு உள்ளது.
today 3rd t20 match india vs new zealand
இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்காக மைதானத்திற்கு செல்கின்றனர். (கோப்பு படம்)
today 3rd t20 match india vs new zealand
கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்துடன் மோதி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இதில் அதிர்ச்சியடைந்துள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இத்தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் சற்று ஆறுதலைத்தரும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். கோப்பையை வெல்லுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu