டிஎன்பிஎல் கிரிக்கெட்:திருப்பூரை வீழ்த்தியது : திருச்சி வாரியர்ஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட்:திருப்பூரை வீழ்த்தியது : திருச்சி வாரியர்ஸ் அணி
X

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணியை, வீழ்த்திய திருச்சி  அணி.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி, வெற்றிப் பெற்றது.

டிஎன்பில் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் 8 அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி வாரியர்ஸ் அணி தனது 5 வது போட்டியில் திருப்பூர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்திருந்தது. இந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்திருந்தனர்.

திருச்சி அணியின் பந்து வீச்சாளர்கள் பொய்யாமொழி 3 விக்கெட்டையும், சரவண் குமார் 2 விக்கெட்டையும் எடுத்தனர். தொடர்ந்து 2nd பேட்டிங்கை திருச்சி அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், முகுந்த் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார்.

திருச்சி அணி தொடர்ந்து 3 விக்கெட்களை பறி கொடுத்த நிலையில் நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் இணை அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் லீக் போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த திருச்சி அணி தரவரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!