இந்துாரில் இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்கா 3 வது டி20போட்டி :ஹாட்ரிக் வெற்றியா?

third t20 ind vs south africa today
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்தியாவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி 20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளில்இந்திய அணியோடு விளையாடுகிறது.இதில் டி20போட்டிகளில் இரண்டுபோட்டி நிறைவடைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.இந்நிலையில்இரு அணிகள் மோதும் 3 வது போட்டியானதுஇந்துாரில் இன்று இரவு நடக்கிறது. இந்திய அணியானது இப்போட்டியிலும் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஏற்கனவே தொடரைவென்றாலும் இந்திய அணி பழைய உற்சாகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள். இன்றைய போட்டியில் விராத்கோலி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
ஓபனிங் பேட்ஸ் மேன்களாக இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்குவார்கள். ஆனால்ராகுல்ஓய்வில் இருப்பதால் இன்று சூர்யகுமார் அல்லது ரிஷப் பண்ட் ரோகித்துடன் ஜோடி சேர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்காவுக்குஇடையே 3 வது டி20 போட்டி நடக்கும் இந்துார் ஹோல்கர் மைதானம்.
விராட்கோலிக்கு பதிலாக களமிறங்கும் ஸ்ரேயாஸ் நிறுத்தி நிதானமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யகுமார் கடந்த மேட்சில் அதிரடியாக ஆடியது போல் விளையாடி ஸ்கோரை உயர்த்துவார் என்றும் எதிர்நோக்கியுள்ளனர் ரசிகர்கள்.
இந்தியஅணியைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினாலும் அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீசும் பவுலர்களின் நிலையே பரிதாபகரமாக உள்ளது. கடந்த போட்டியில் தீபக்சாஹர், ஸ்பின்னர் அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்காதது இந்திய அணிக்கு பெரும்பின்னடைவு.
டி20 உலக கோப்பை விரைவில் இம்மாதம் துவங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பங்கேற்கும் சர்வதேச விளையாட்டு இந்திய அணிக்கு இதுதான். இதில் எப்படி வீரர்கள் விளையாடுகிறார்கள்? அதைப்பொறுத்துதான் மற்றவை எல்லாமே. எனவே இன்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டு ரன்களை வாரி வழங்காமல் விக்கெட் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.
தெ.ஆ அணி
கடந்த போட்யில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி கடைசியில் செஞ்சுரி அடித்த மில்லர் இந்த போட்டியிலும்அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் துவக்கத்தில் எந்த ரன்களும் எடுக்காத நிலையில் சற்று நேரம் கழித்து பார்முக்கு வந்த மில்லர் அதிரடி ஆட்டம் ஆடி செஞ்சுரி அடித்தார். இவருடன் களம் சேர்ந்த டீகாக்கும்இன்று அதிரடி காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்காமல் தெ.ஆ. அணி வீரர்கள் திணறும் அளவுக்கு பந்து வீசி விக்கெட்டை எடுக்கவேண்டும். ஆரம்பத்தில் விக்கெட்டை சாய்த்துவிட்டால் பின்னர் பிரச்னையில்லாமல் போய்விடும்.
வருண பகவான்
இந்துாரைப்பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்பட்டாலும் மழை வருவதற்கு வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுவதால் ஆட்டம் களை கட்டுவதோடு இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாட்ரிக் சாதனை
கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இன்று இந்துாரில் நடக்கும் கடைசி மற்றும் 3 வது டி20 போட்டியிலும் இந்திய அணி வென்றால் ஹாட்ரிக் சாதனைதான்... அதனை பெற ரோகித் திட்டமிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu