மூன்றாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்
பிபிடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுக்கான மேடை.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டி 2022ஐ இன்று (மே 25ம் தேதி) இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துவதுடன், இளைஞர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஆதரிக்க அரசால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே, கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்றாது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், மே 25 முதல் ஜூன் 3ம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. வாரணாசி, கோரக்பூர், லக்னோ மற்றும் கௌதம புத்தா நகர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 21 விளையாட்டுகளில் நடைபெறும் இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். நிறைவு விழா, ஜூன் 3-ம் தேதி வாரணாசியில் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டுப்போட்டியின் சின்னம் ஜித்து என பெயரிடப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரேதச மாநில அரசின் விலங்கான சதுப்பு மான் எனப்படும் பரசிங்காவை குறிக்கிறது.
கூடுதல் தலைமைச் செயலாளர் (விளையாட்டு), நவ்நீத் சேகல் கூறுகையில், அனைவரின் பார்வையும் லக்னோவை நோக்கியே இருக்கும். உ.பி.யில் விளையாட்டு சூழல் மாறிவிட்டது. யோகி ஆதித்யநாத் அரசாங்கம் கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள்-2022 உதவியுடன் உலக விளையாட்டு அரங்கில் தனது முத்திரையை பதிக்க தயாராக உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் உ.பி.யில் விளையாட்டு உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என்று சேகல் மேலும் கூறினார். "விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க உ.பி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu