இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ரத்து

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ரத்து
X
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை ஆறாவது முறையாக வென்றது. இதனை தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் 4-1 என்ற வீதத்தில் இந்தியா தொடரை வென்றது.

இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பன் நகரில் இன்று நடைபெற இருந்தது. போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில்,தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!