உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா இன்று மாலை தொடங்குகிறது

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா இன்று மாலை தொடங்குகிறது
X
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32 வது ஒலிம்பிக் போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த 11,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

உலகின் பிரமாண்ட திருவிழா இன்று மாலை தொடங்குகிறது:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32 வது ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 13 பேர் பங்கேற்பு. இந்த திருவிழா ஜப்பானின் டோக்கியோவில் இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது.

டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ தொடங்கிவைக்கிறார். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ளனர். இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11,683 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத்சிங் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர். ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!