/* */

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தடுமாறும் இந்தியா

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

HIGHLIGHTS

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தடுமாறும் இந்தியா
X

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் தொடங்கியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

2-வது நாள் ஆட்டத்தில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.

3-ஆம் நாள் ஆட்டம் நேற்று துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.

மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200-ரன்களை எட்டவே இந்திய அணி போராடியது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. டாம் லாதம் மற்றும் தேவோன் கன்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய நிலையில் டாம் லாதம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கன்வேயுடன், கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கன்வே, தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் 54 ரன்களில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில், ஷமியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து அணி 49 ஒவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் 12 ரன்களும், ரோஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் ஆர்.அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தற்போது நியூசிலாந்து அணி, இந்திய அணியை விட 116 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Updated On: 21 Jun 2021 2:19 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...