6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: தமிழகம் இரண்டாமிடம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது . கடந்த 19 -ம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இந்த போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நிறைவு விழா நடைபெற்றது.மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாட்டின் விளையாட்டுத் தலைநகர் என்ற நிலையை அடைய கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு நிரூபித்துள்ளது. எத்தனையோ முறை தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்று இருந்தாலும், இந்த முறைதான் பதக்க பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு வந்திருக்கிறது.
திராவிட மாடல் அரசு எடுத்த முயற்சிகளே இதற்கு காரணம். கிராமப்புற ஏழை, எளிய வீரர்களை அடையாளம் காண, கடந்த ஒரு வருடங்களாக விளையாட்டுத்துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.விளையாட்டை ஒரு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu