டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று நியூசிலாந்து.-பாகிஸ்தான் செமிபைனலில் மோதல் :வெற்றி யாருக்கு?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்   இன்று நியூசிலாந்து.-பாகிஸ்தான்   செமிபைனலில் மோதல் :வெற்றி யாருக்கு?
X

ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் செமிபைனலில் நியூசி- பாக் அணிகள் மோதுகிறது. (பைல்படம்)

Todays T20 Worldcup Match - உலகமே எதிர்நோக்கியுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்று ஜெயிக்கப்போவது யாரு? நாளை இந்தியாவுடன் மோதப்போவது யாரு? என்பது இன்று தெரிந்துவிடும்.

Todays T20 Worldcup Match -



t20 worldcup semifinal match today

உலகமே எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பையானது இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதாவது இன்று செமிபைனல் போட்டியானது நியூசிலாந்துக்கும் பாகிஸ்தான் இடையே சிட்னியில் நடக்க உள்ளது.ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையானது தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்றும் நாளையும் செமிபைனல் நடக்கிறது. இன்றுநடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. நாளை நடக்க உள்ள போட்டியில் இந்தியா இங்கிலாந்தினை எதிர்கொள்கிறது. இன்று வெற்றி பெறும் அணி நாளை வெற்றி பெறும் அணிகள் இரண்டும் பைனலில் மோதும்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை நல்ல பார்மில் உள்ளது என்றே சொல்லலாம். இந்த அணியானது சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை மோத உள்ள இங்கிலாந்திடம் சூப்பர்-12 சுற்றில் நியூசிலாந்து தோற்றது. ஆப்கானிஸ்தானுடனான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

குரூப் 1ல் நல்ல ரன் ரேட்டுடன் ஏழு புள்ளிகள் பெற்று முன்னேறி தற்போது அரையிறுதியை நியூசிலாந்து எட்டியுள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான கான்வே, கிளன் பிலிப்ஸ், கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்சல், ஜிம்மிநீஷம், ஆலன் ஆகியோர் உள்ளதால் இன்று நடக்க உள்ள மேட்சில் ரன் மழைபொழியுமா? என ரசிகர்கள் காத்துள்ளனர்.

நியூசிலாந்து பவுலர்களைப் பொறுத்தவரை பவுல்ட், சவுத்தி, பெர்குசன், பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை மிரட்டுகின்றனர். சுழற்பந்துவீச்சில் சான்ட்னர், இஷ்சோதி ஆகியோர் நம்பிக்கை தருவதாக உள்ளனர் என்பதால் இன்று நடக்கும்போட்டியினை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் உள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாப்வே, இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதி வெற்றி பெற்றது. நெதர்லாந்திடம் தென்ஆப்பிரிக்காவானது தோல்வியைத் தழுவியதால் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. குரூப் 2 ல் 6 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ள பாகிஸ்தான் அதிர்ஷ்டத்தினால் உள்ளே நுழைந்துள்ளது.

அதிர்ஷ்டம் நிலைக்குமா?

பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவானது நெதர்லாந்திடம் தோற்றதால் அதிர்ஷ்டத்தினால் அரையிறுதிக்குள் உள்ளே வந்துள்ளது. ஆனால்இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தின் அபார பந்து வீச்சினை பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்வார்களா? என்பது போட்டியின் போது மட்டுமே அறிந்துகொள்ளமுடியும். செமிபைனல் என்பதால் அவர்களும் தங்களது முழுத்திறனை பந்துவீச்சில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது-

பாகிஸ்தான் கேப்டன் இப்போட்டிகளில்ரன் எடுக்கவே திணறுவதால் என்ன ஆகப்போகிறது-? . அந்த அணியில் மற்ற வீரர்களான இப்திகர், ஷான்மசூத் ஆகியோர் பேட்ஸ்மேன் வரிசையில் நம்பிக்கை தந்துவருகின்றனர். துவக்க ஆட்டக்காரராக ரிஸ்வான் கொஞ்சம் நின்று நிதானமாக ரன் சேர்ப்பார் என கணித்தாலும் பின்னர் வருபவர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே? பவுலர்களான ஷாகீன் அப்ரிதி, ஹாரிஸ்ராப் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டலாம். சுழற்பந்தில் நவாஸ், ஷதாப் கான் ஆகியோர் மிரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி ஆடுகளத்தினைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும் இந்த மைதானம். காலையில் மழை பொழிந்தாலும் போட்டி துவங்கும் நேரத்தில்மழை வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மழை வந்தாலும் போட்டியைத் தொடர ரிசர்வ்டே அடுத்தநாள் உண்டு.

ஏற்கனவே நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் 1992,1999ல் நடந்த ஒருநாள் போட்டியி்லும், 2007 ம் ஆண்டு நடந்த டி20 என பாகிஸ்தானிடம்நியூசிலாந்து தோல்விஅடைந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நியூசி அணியானது உலகக்கோப்பை பைனலில் 50 ஓவர் போட்டிகளில் அதாவது 2015,2019 ல் நடந்தது, மற்றும் 2021 ல் நடந்த டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. இவ்வாறாக இருக்க இன்று ஜெயிக்கப்போவது யார்? என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

யார் ஜெயித்தாலும் நாளை இந்தியா மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியோடு பைனலில் மோதும். ஜாம்பவான்களான இங்கிலாந்தை இந்தியா நாளை தோற்கடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future education