டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு உதவிய விண்டேஜ் விராட் கோலி

டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு உதவிய விண்டேஜ் விராட் கோலி
X

அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி

டி20 உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டதில் விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டம் காரணமாக இந்தியா பாகிஸ்தானை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இ இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். 2வது ஓவரில் பாபர் அசாம் ,அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து முகமது ரிஸ்வான் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

பாகிஸ்தான் 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஷான் மசூத், , இப்திகர் அகமது இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். அக்சர் படேலின் ஒரு ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட. இப்திகர் அகமது முகமது ஷமி பந்துவீச்சில் 34 பந்துகளில் 51 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஷதாப் கான் ,ஹைதர் அலி ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159ரன்கள் எடுத்தது. இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் ,ஹார்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டும்,புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் , ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆனால், 4 ரன் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் அவுட் ஆனது ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் 15 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா ஓவரில் அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் ஐந்தாவது பந்தில் அவுட் ஆனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது, களமிறங்கிய அஸ்வின் 4 ரன் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது.

இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.

விராட் கோலி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார், அவர் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார், கடைசி பந்தில் பாகிஸ்தானை இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் த்ரில்லர். 160 ரன்களைத் துரத்துவதில் முழுவதும் இந்தியா சிக்கலில் இருந்தது, ஆனால் கோலி முதலில் ஒரு நங்கூரம் வகித்தார். விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!