டி20 உலக கோப்பை: ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா

டி20 உலக கோப்பை: ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா
X

கேப்டன் கோலி, ரவீந்திர ஜடேஜா

இந்திய அணி,ஆறுதல் வெற்றிப் பெற்று வெளியேறியது. டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலியும், பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியும் விலகினர்.

7வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த மாதம் 17ம் தேதி ஓமனில் தொடங்கியது. தொடரில் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியா – நமிபியா அணிகள் மோதியது. கடைசி லீக் ஆட்டமான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.


எனவே நமீபியா முதலில் பேட்டிங் செய்தது. நமீபியா அணியின் ஸ்டீபன் பார்ட் – மைக்கேல் வான் லிங்கன் ஜோடி ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களமிறங்கினர்.

ஸ்டீபன் பார்ட் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மைக்கேல் வான் லிங்கன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். கிரேக் வில்லியம்ஸ் டக் அவுட்டிலும், ஹெகார்ட் எரோஸ்மஸ் 12 ரன்களிலும், அடுத்து வந்த நிகோல் லோஃப்டி ஈடன் 5 ரன்களிலும், டேவிட் வைஸ் 26 ரன்களிலும், ஜேஜே ஸ்மித் 9 ரன்களிலும், ஜேன் கிரீன் ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். நமீபியா அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை குவித்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

ஓப்பனிங் பேஸ்மேன்கள் கேஎல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியை காட்டினர். ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்த நிலையில அவுட் ஆனார். ஒன் டவுனில் இறங்கிய சூர்ய குமார் யாதவ், கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடி 15.2 ஓவரில் 136 ரன்களை குவித்தனர்.

இதில் கேஎல்.ராகுல் 54 ரன்களையும், சூர்ய குமார் யாதவ் 25 ரன்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைத்தது.

இந்த போட்டி இந்திய அணிக்கு டி20 தொடரில் 150 வது போட்டியாகும், இந்த போட்டியுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறினார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரியும், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!