டி20 உலகக்கோப்பை: தொடரை நடத்தும் நாடு கோப்பையை வென்றதில்லை, தொடரும் வரலாறு
இதுவரை நடைபெற்ற 7 டி20 உலகக்கோப்பை போட்டிகளில், தொடரை நடத்தும் நாடு கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு இந்த தொடரிலும் தொடர்கிறது
கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் முதலில் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், தொடரை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேற, இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
2021 டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் இலங்கை இறுதிப்போட்டி வரை முன்னேறி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2014ல் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் வெளியேற, இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2016 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதி வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து உலகக்கோப்பை டி20 தொடரை நடத்தின. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. ஓமன் நாடோ தகுதிச்சுற்றை தாண்டவில்லை. அதில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
இம்முறை டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்திவரும் நிலையில், அந்த அணி தற்போது குரூப் சுற்றுடன் வெளியேறியது.
இதனால், போட்டியை நடத்தும் அணி கோப்பையை வெல்ல முடியாமல் போகும் வரலாறு இம்முறையும் தொடர்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu