டி20 உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டி : வெல்லப்போவது யார்

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டி : வெல்லப்போவது யார்
X

முதல் அரையிறுதி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன், நியூசிலாந்து அணி கேப்டன்.

டி20 உலக கோப்பையின் முதல் அரை இறுதி பேட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

7வது டி20 உலககோப்பை போட்டி ஓமனில் கடந்த 17 ம் தேதி தொடங்கியது. பின்னர் கடந்த 24ம் தேதி முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. குரூப் 1ல் முதல் இடத்தை பிடித்த அணியும், குரூப் 2ல் இரண்டாவது இடத்தை பிடித்த அணிக்கும் முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டிகள் இன்று மாலை அபுதாபியில் நடக்கிறது.


இங்கிலாந்து அணி கடந்து வந்த பாதை

இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது . இங்கிலாந்து இப்போது முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி பிரிவு 1- பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

சூப்பர் 12 சுற்றின் போது இங்கிலாந்து 5 போட்டிகளில் விளையாடியது. 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 1ல் தோல்வியடைந்தது. 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. இங்கிலாந்துடன், ஆஸ்திரேலியாவும் குரூப் 1ல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து,

பின்னர் 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இருப்பினும், சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை

குரூப் 2 வில் இரண்டாவது இடத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் மோதி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் மட்டுமே வெற்றியை இழந்தது. குரூப் 2வில் 8 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.


T20 உலகக் கோப்பை 2021 இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

பேட்ஸ்மேன்கள்

ஈயோன் மோர்கன் (c), ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன்

விக்கெட் கீப்பர்கள்

ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்

ஆல்ரவுண்டர்கள்

மொயீன் அலி, டாம் குரான், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

பந்துவீச்சாளர்கள்

ரீஸ் டாப்லி, அடில் ரஷித், மார்க் வூட்


இருப்பு வீரர்.

லியாம் டாசன்

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்

பேட்ஸ்மேனகள்

கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில்

விக்கெட் கீப்பர்கள்

க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், டெவன் கான்வே

ஆல்ரவுண்டர்கள்

டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர்

பந்துவீச்சாளர்கள்

டோட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, கைல் ஜேமிசன், இஷ் சோதி, டிம் சவுத்தி

இப்படி இரண்டு வலுவான அணிகள் மோதுகின்றன. பயிற்சி ஆட்டத்த்ல் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததுள்ளது என்பது குறிப்பட தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!