டி20 உலககோப்பை முதல் அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி

டி20 உலககோப்பை முதல் அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணி அபார வெற்றி
X

வெற்றிப் பெற வைத்த  நியூசிலாந்து அணி வீரர்கள்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அபுதாபியில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணி வீரர்கள் மிக துடிப்பாக பந்துகளை வீசினர். ரன்கள் எடுப்பதில் இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் திணறியது.

ஜானி பேர்ஸ்டோவ் 17 பந்துக்களை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜோஸ் பட்லர் 24 பந்துக்களை சந்தித்து 29 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


டேவிட் மாலன் 30 பந்துகளை சந்தித்து 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயின் அலி 37 பந்துகளை சந்தித்து 51 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை இருந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 10 பந்துகளை சந்தித்து 17 ரன்களை எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் இயான் மோர்கன் 2 பந்துகளை சந்தித்து 4 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் டிஎம் சவுத்தி, ஆடம் மிலனே, ஜேம்ஸ் நீஷம், இஸ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பவர் பிளேயில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டு இழந்து 40 ரன்களை எடுத்தது. 10 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் அதாவது கடைசி 10 ஓவரில் 99 ரன்களை எடுத்தது. இருபது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது.

167 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக மார்ட்டின் குப்டில், டேரில் மிட்செல் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே மார்ட்டின் குப்டில் 3 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.


முதல் டவுனில் கேன் வில்லியம் சன் கேப்டன் இறங்கினார். 11 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி ரன்கள் எடுப்பதில் தடுமாறியது.

இரண்டாவது டவுன் இறங்கிய டெவோன் கான்வே, டேரில் மிட் செல் ஜோடி அபாரமாக ஆடியது.

டெவோன் கான்வே 38 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மறு முனையில் ஓப்பனிங் பேட்ஸ் மேன் அதிரடியாக நிலைத்து ஆடினார். 3வது டவுன் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்களை எடுத்து அவுட்டானார். 3வது டவுன் இறங்கிய ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களை எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய சான்டனர் ஆட்டம் இழக்கவில்லை.

நியூசிலாந்து அணி19வது ஓவர் இறுதி பந்தில் 167 வது ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய டேரில் மிட்செல் 47 பந்துகளில் 72 ரன்களை அதிரடியாக குவித்தார். இவரின் பிரம்மாண்ட ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. 7வது டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாட நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!