டி20 உலக கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ? நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பல பரீட்சை

டி20 உலக கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ? நியூசிலாந்து, ஆஸ்திரேலியா பல பரீட்சை
X

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் மோதவுள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி கேப்டன்கள்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. கோப்பையை கைப்பற்ற நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று கடும் போட்டி நடக்கவுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ஓமனில் நடந்தது. இன்று நடக்கும் இறுதி போட்டி துபாயில் நடக்க உள்ளது. குரூபர் 1-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா அணியும், குரூப் 2-ல் இரண்டாவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகிறது.

குரூப் 2-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியும், குரூப் 1-ல் முதல் இடத்தைப்படித்த இங்கிலாந்து அணியும் முதல் அரையிறுதி போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

குரூப் 1-ல் இரண்டாவது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணியும், குரூப் 2-ல் முதல் இடத்தைத பிடித்த பாகிஸ்தான் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கை பாகிஸ்தான் அணி செய்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

7வது டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை ஒரு முறைக் கூட டி20 உலக கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை இந்த இரண்டு அணிகளில் ஒரு அணிதான் கோப்பையை வெல்லும், அது எந்த அணி, இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி சூப்பர் 12 லீக் போட்டியில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அதுபோல ஆஸ்திரேலியா அணியும் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த இரண்டு அணிகளுமே அரை இறுதிப் போட்டியில் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்ததால் வெற்றிப் பெற்றுள்ளது. இறுதி போட்டியிலும் டாஸ் வெல்லும் அணியே உலக கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் இரவு 7 மணிக்கு தெரிய வரும், நியூசிலாந்து அணியின் உத்தேச பட்டியல்: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டிம் சீஃபர்ட் (வி.கே.), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட், இஷ் சோதி

ஆஸ்திரேலியா அணியின் உத்தேச பட்டியல் : டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேட்ச்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (வி.கே.), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இந்த இறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும், இரண்டு அணியும் சம நிலையில் இருப்பதால் போட்டி மிக கடுமையாக இருக்கும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil