டி20 உலக கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியா டாஸ் வென்றது நியூசிலாந்து பேட்டிங்

டி20 உலக கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியா டாஸ் வென்றது நியூசிலாந்து பேட்டிங்
X
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதல் பேட்டிங் செய்கிறது.

ஐக்கிய அமீரகத்தில் டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ஓமனில் நடந்தது. இன்று நடக்கும் இறுதி போட்டி துபாயில் நடக்கிறது

7வது டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை ஒரு முறைக் கூட டி20 உலக கோப்பையை வென்றது கிடையாது.

இந்த முறை இந்த இரண்டு அணிகளில் ஒரு அணிதான் கோப்பையை வெல்லும், அது எந்த அணி இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி சூப்பர் 12 லீக் போட்டியில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அதுபோல ஆஸ்திரேலியா அணியும் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த இரண்டு அணிகளுமே அரை இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததால் வெற்றிப் பெற்றுள்ளது. இறுதி போட்டியிலும் டாஸ் வெல்லும் அணியே உலக கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் டாசை ஆஸ்திரேலியா அணி வென்றது. முதல் பேட்டிங்கை நியூசிலாந்து அணி செய்கிறது.

நியூசிலாந்துஅணி : மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டிம் சீஃபர்ட் (வி.கே.), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட், இஷ் சோதி

ஆஸ்திரேலியா அணியின் : டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேட்ச்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (வி.கே.), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இந்த இறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும், இரண்டு அணியும் சம நிலையில் இருப்பதால் போட்டி மிக கடுமையாக இருக்கும்,

முதல் பேட்டிங் செய்யும் அணி 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil