டி20 உலக கோப்பை கிரிக்கெட்டு போட்டி : ஸ்காட்லாந்து அணி வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டு போட்டி : ஸ்காட்லாந்து அணி வெற்றி
X
இருபது ஓவர் உலக கோப்பையில் வெற்றிப் பெற்ற ஸ்காட்லாந்து அணி.
ஓமனில் இன்று தொடங்கிய டி20 உலக கோப்பை போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி, பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

ஓமனில் இன்று தொடங்கிய டி20 உலக கோப்பை போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி, பங்களாதேஷ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற அச்சம் எழும்பியதாலும், இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.


இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் 'ஏ' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, 'பி' பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் பிறகு, இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள் இடம்பெறுகின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்,

இவ்வாறாக போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமனில் துவங்கியது.

இரண்டாவது போட்டி ஸ்காட்லாந்து அணிக்கும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி முதல் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக ஜார்ஜ் முன்சே கைல் கோட்சர் களம் இறங்கினர்.

அணி 5 ரன் எடுத்த நிலையில் கைல் கோட்சர் அவுட்டானார், அணியின் ஸ்கோர் 45 ஆக இருக்கும் போது மேத் தேயு அவுட்டானார். 11.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 53 ரன்னாக இருக்கும் போது ஸ்காடலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மார்க்வாட், கிறிஸ் கிரீவ்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருபது ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை குவித்தது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் மகேதி ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சைஃபுதீன், டாஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

141 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு பங்களாதேஷ் அணி களம் இறங்கியது. லிட்டன் தாஸ், சாம்மியா சர்கார் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர். 5 ரன் எடுத்த நிலையில் லிட்டன் தாஸ் அவுட்டானார். அதுபோல சம்மியா சர்காரும் 5 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஒன் டவுன், மற்றும் இரண்டாவது டவுன் இறங்கிய ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். அவர்களும் ஷாகிப் அல் ஹசன் 20 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்கள் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர்.

பின்னர் வந்த வீரர்கள் ரன்களை எடுக்க திணறினர். இதனால் பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர் பிராட் வீல் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீவ்ஸ 2 விக்கெட்டுக்களையும், ஜோஷ் டேவி, மார்க் வாட் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself