டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்…
X

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம்- ரிஸ்வான் ஜோடி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், தகுதிச் சுற்றின் முடிவில் வெஸ்ட் இன்டீஸ், நமீபியா, யுஏஇ, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு அணிகள் வெளியேறின.

தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 சுற்று முடிவில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் வெளியேறின. குரூப்-1 பிரிவில் முதலிடத்தை நியூஸிலாந்து அணியும், இரண்டாவது இடத்தை இங்கிலாந்து அணியும் பிடித்தன. இதேபோல, குரூப்- 2 பிரிவில் இந்திய அணி முதலிடத்தையும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இந்த நான்கு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பெற்றார். பின் ஆலனை ஒரு மோசமான இன்ஸ்விங்கர் மூலம் அந்த விக்கெட்டை பறித்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிச்சேல் 53 ரன்களும், கேன் வில்லியம்சன் 46 ரன்களும், கன்வே 21 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் அசாம் 42 பந்துகளில் 53 ரன்களும், முகமது ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை குவித்தனர்.

அதன் பிறகு களம் இறங்கிய முகமது ஹாரீஸ் 26 ரன்களுக்கு 30 ரன்களை குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்குத் தேவையான 153 ரன்களை எடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தது. ஆட்ட நாயகனாக முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நியூஸிலாந்து அணியினர் 152 ரன்கள் எடுத்திருந்தபோதிலும் பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரை கட்டுப்படுத்த தவறியதால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

பொதுவாகவே எந்தத் தொடராக இருந்தாலும் அதில் முதல் ரவுண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூஸிலாந்து அணி நாக்-அவுட் சுற்றில் சரியாக விளையாடாமல் வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது. இதேபோல, சூப்பர்-12 சுற்றில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியுற்ற நிலையில், தென் ஆப்பிரிக்க அணியை எதிர்பாரத வகையில் நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!