/* */

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : ஓமன் அணி அபார வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது, முதல் போட்டியில் விக்கெட் இழப்பு எதுவும் இன்று ஓமன் அணி அபார வெற்றிப் பெற்றது.

HIGHLIGHTS

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : ஓமன் அணி அபார வெற்றி
X

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற அச்சம் எழும்பியதாலும், இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது.


முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் 'ஏ' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, 'பி' பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் பிறகு, இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்றில் தகுதி பெறும் அணிகள் இடம்பெறுகின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்,

இவ்வாறாக போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமனில் துவங்கியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமனில் இன்று தொடங்கியது முதல் போட்டி ஓமன் கிரிக்கெட் அணைக்கும், பப்புவா நியூகினியா கிரிக்கெட் அணிக்கும் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் பேட் செய்த பப்புவா அணி பிலால் கான் வீசிய முதல் ஓவரில் ஐந்தாவது பந்தில் ஓபனிங் பேட்ஸ்மேன் டோனி உரா விக்கெட்டை பறிகொடுத்தார் அதுபோல ஒரு ரன்கள் எடுக்கும் முன்னரே இரண்டாவது ஓவரில் கலிமுல்லா வீசிய மூன்றாவது பந்தில் லெக சியாகா அவுட்டாகி அவுட்டானார் ஜீரோ ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை கேப்டன் அசாத் வாலா, சார்லஸ் அமினி ஜோடி தூக்கி நிறுத்தியது, அசாத் வாலா 56 ரன்களையும், சார்லஸ் அமினி 37 எண்களையும் குவித்தனர்.

இந்த இருவரின் விக்கெட் விழுந்த பிறகு, பின்னர் வந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்த பப்புவா நியூ கினியா 129 ரன்களை எடுத்தது.

130 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ஓமன் அணி பேட்ஸ்மேன்கள் அகிப் இலியாஸ் ஜதிந்தர் சிங் ஆகியோர் களமிறங்கினர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் விக்கெட் இழப்பின்றி 14 ஓவர் நான்காவது பந்தில் வெற்றி இலக்கை எட்டினார்.

இதில் ஜதிந்தர் சிங் 42 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் குவித்தார் இதில் 7 பவுண்டரிகளையும், நான்கு சிக்ஸர்களையும் அடித்தார். நிதானமாக ஆடிய இலியாஸ் 43 பந்துகளை சந்தித்து 50 ரன்களை அடித்தார். அவர் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சரையும் அடித்திருந்தார்.

இதன்மூலம் முதல் போட்டியில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி எளிதாக பப்புவா நியூ கினியா அணியை ஓமன் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஓமன் அணியின் கேப்டன் மக்சூத் தேர்வு செய்யப்பட்டார். இவர் வீசிய 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Updated On: 18 Oct 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...