டி20 உலககோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து வென்றது
நெதர்லாந்து அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி.
.16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் களம் காண்கிறது.
இன்று நடந்த 3வது லீக் போட்டியில் நெகர்லாந்து அணி டாஸ் வென்றது. முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேக்ஸ் ஓ டவுட் , பென் கூப்பர் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர். பென் கூப்பர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். இவர் ரன்கள் எதுவும் எடுக்க வில்லை.
ஃபர்ஸ்ட் டவுன் இறங்கிய பாஸ் டி லீடே 7 ரன்களில் அவுட் ஆனார். இரண்டாவது டவுன் இறங்கிய ரியான் பத்து டோஷேட் இவர் சந்தித்த முதல் பந்தில் எல்பி டபிள்யூ ஆனார். 3 டவுன் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரும் ரன் எதுவும் எடுக்க வில்லை. 4வது டவுன் இறங்கிய ரோலோக்ஃப் வான் டெர் கிளின் போல்டு ஆகி வெளியேறினார். இவரும் ரன் எதுவும் எடுக்கவில்லை.
5வது டவுன் இறங்கிய பீட்டர் சீலார்21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 6வது டவுனில் இறங்கிய லோகன் வான் பீக் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரன் ஆவுட் ஆனார். பிராண்டன் குளோவர் ரன்கள் எடுதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய மேக்ஸ் ஓ டவுட் 51 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஃபிரெட் கிளாசென் நாட் அவுட் ஆனார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களை எடுத்தனர்.
அயர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் கர்டிஸ் கேம்பர் 4 விக்கெட்டுகளையும், மார்க் அடேர் 3 விக்கெட்டுக்களையும், ஜோஷ் லிட்டில் 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு அயர்லாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பால்ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன் ஆகியோர் களம் இறங்கினர்.
கெவின் ஓ பிரையன் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முதல் டவுன் இறங்கிய ஆண்டி பால்பர்னி 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 2வது டவுன் இறங்கிய கரேத் டெலானி 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்ஆனார். கர்டிஸ் கேம்பர், ஓப்பனிங் பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் 107 ரன்களை அடித்து அயர்லாந்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.
அயர்லாந்து அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 107 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu