டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு இடையே பயிற்சி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ராய் விக்கெட்டை பறிக் கொடுத்தார். ஜோஸ் பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒன் டவுனில் இறங்கிய டேவிட் மாலன் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 2 வது டவுனில் இறங்கிய ஜானி பெயர்ஸ்டோ 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 30 ரன்களை எடுத்து அவுட்டானார்., மொயீன் அலி 43 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் ஒரு ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

189 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு இந்திய அணி ஓப்பனிங் பேட்ஸ் மேன்கள் கேஎல்.ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினர். கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடினார் 24 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

எதிர் முனையில் இறங்கிய இஷான் கிஷான் 46 பந்துகளில் 70 ரன்களை குவித்தார். காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். ஒன் டவுனில் இறங்கிய கேப்டன் வீராட் கோலி 13 பந்துகளை சந்தித்து 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் நிதானமாக விளையாடினார். சூர்ய குமார் யாதவ் 8 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹர்த்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 19வது ஓவர் முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது..

Tags

Next Story
Will AI Replace Web Developers