டி20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா அணியை விரட்டியடித்த இந்திய அணி வீரர்கள்.
ஐக்கிய அமீரகத்தில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிகள் இடையே இரண்டாவது பயிற்சி ஆட்டம் நடக்கிறது. இதில் இந்திய அணியில் கேப்டன் வீரட்கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக களம் இறங்கினார்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி இந்திய அணி களம் இறங்குகிறது. இந்திய அணியில் - KL ராகுல், ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன், ரிஷப் பந்த் (w), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி. ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஆஸ்திரேலியா அணியில் - டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (சி), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மத்தேயு வேட் (வ), ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்வெப்சன், க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ். ஆகியோர் விளையாடுகின்றனர். டாஸ் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட் ஆனார். ஆரோன் பின்ச் 8 ரன்னில் அவுட் ஆனார். மிட்செல் மார்ஷ் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களை எடுத்து அவுட்டானார்.,
மக்ஸ்வெல் 37 ரன்களை எடுத்து அவுட்டானார. மார்க் டோனிஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேத்யூ வேட் ஆட்டம் இழக்காமல் 4 ரன்களை எடுத்தார்.
ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர்களில் 5 விக்கெட்ட இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்திய அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் புவனேஸ்குமார் ஒரு விக்கெட்டையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும், ராகுல் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
வீராட் கோலி 2 ஓவர்களை வீசி 12 ரன்களை கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3 ஓவர்களை வீசி 30 ரன்களை வழங்கினார். சக்கரவர்த்தி ஒரண்டு ஓவர்களை வீசி 23 ரன்களை கொடுத்தார்.
இந்திய அணியின் ஓப்பனிங் பேன்ஸ் மேன்களாக கே.எல்.ராகுல், ரேகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். கே.எல்.ராகுல் 39 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டானார். ரோஹித் சர்மா 60 ரன்கள் எடுத்த நிலையில் ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர் விளையாடிய குர்ய குமார் யாதவ் 38 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணி 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு 153 ரன் இலக்கை அடைந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை, இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu