டி20 உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா முதல் பேட்டிங், இந்தியா பந்து வீச்சு

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா முதல் பேட்டிங், இந்தியா பந்து வீச்சு
X
இரண்டாவது பயிற்சி ஆட்டத்தின் போது ஆலோசனையில் ஈடுபட்ட பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி, ஆலோசகர் டோனி, கேப்டன் வீராட் கோலி, இன்றைய கேப்டன் ரோகித் சர்மா
டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி பத்து வீசுகிறது.

ஐக்கிய அமீரகத்தில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிகள் இடையே இரண்டாவது பயிற்சி ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் இந்திய அணியில் கேப்டன் வீரட்கோலி, கேப்டனுக்கு பதிலாக ரோகித் சர்மா களம் இறங்குகிறார்.

ரோகித் சர்மா தலைமையிலான அணி இந்திய அணி களம் இறங்குகிறது. இந்திய அணியில் - KL ராகுல், ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன், ரிஷப் பந்த் (w), வீரட்கோலி சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி. ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலியா அணியில் - டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (சி), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மத்தேயு வேட் (வ), ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்வெப்சன், க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்.

டாஸ் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது. பும்ரா மற்றும் ஷமி ஓய்வில் இருப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார். சற்று நேரத்தில் போட்டி துவங்க உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!