டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதி: இந்தியாவின் 10 ஆண்டு காத்திருப்பு
இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2007 சாம்பியன் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். தென்னாப்பிரிக்கா முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கயானாவில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியில் , இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஜோடி 73 ரன்களை குவித்து சிக்கலில் இருந்து காப்பாற்றியது. ரோஹித் 39 பந்தில் 57 ரன்களில் வீழ்ந்தார், சூர்யகுமார் 36 பந்தில் 47 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து இன்னிங்ஸில், அக்சர் படேல் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் துரத்தலைத் தடுத்தார், குல்தீப் யாதவும் 19 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்தார் .
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வரலாறு படைக்க இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu