T20 World Cup Ind Vs SA: சூர்யகுமாரின் சூரசம்ஹாரம், ஜெயிக்குமா இந்திய அணி?

T20 World Cup Ind Vs SA: சூர்யகுமாரின் சூரசம்ஹாரம், ஜெயிக்குமா இந்திய அணி?
X

அதிரடி காட்டிய சூர்யகுமார்

49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்திய அணி சூர்யகுமாரின்அதிரடியால் 133 ரன்கள் எடுத்தது

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த போட்டி தொடரில் பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் கேப்டன் ரோகித் சர்ம, கே.எல் ராகுல் களமிறங்கினர். நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது.

இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7-வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து தீபக் ஹூடா டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இதன்பின் சூர்யகுமார் யாதவ்- தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தினேஷ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அஸ்வின் தனது பங்கிற்கு 7 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

கடந்த போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க கோலிக்கு மேலும் 16 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த போட்டியின் மூலம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டி ரோகித் சர்மாவிற்கு ஒட்டுமொத்தமாக டி20 உலக கோப்பையில் 36-வது போட்டியாகும். இதன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் அவர் திலகரத்ன தில்ஷனை பின்னுக்கு தள்ளி (35 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!