ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தூரில் ஆப்கானிஸ்தான் இந்தியா  டி 20 கிரிக்கெட் போட்டியின் ஒரு காட்சி.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. இந்தூர் ஸ்டேடியம் பேட்டிங் பீச் என்பதால் ஆப்கன் அணி வீரர்கள் பவுண்டரிக்கும் சிக்சிற்கும் பந்துகளை விளாசி தள்ளினார்கள். ஆனாலும் அவர்களது விளாசல் நீடிக்க வில்லை. ரன்கள் எந்த அளவுக்கு எடுத்துக் கொண்டே இருந்தார்களோ அதே அளவு விக்கட்டும் விழுந்து கொண்டே இருந்தது. இறுதியாக 9 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் பிடித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், அதிரடி வீரர் ஜெய்வாலும் இறங்கினார். கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்னும் எடுக்காமல் பெவிலியனுக்கு திரும்பினார். ஆனால் ஜெய்ஸ்வாலும், ரோகித்திற்கு பதிலாக வந்த கோலியும் ஜோடி சேர்ந்து நன்றாக ஆடினார்கள்.

கோலி 29 ரன்களில் அவுட் ஆக அவருக்கு பதிலாக இறங்கிய சிவம் துபே ஜெய்ஸ்வால் ஜோடி நங்கூரம் போல் நின்று ரன்களை குவித்தார்கள். ஆப்கன் வீரர்கள் போட்ட பந்துகளை எல்லாம் பௌண்டரிக்கும் சிக்ஸ்க்கும் வளாசி தள்ளினார்கள். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் ஒரு ஓவருக்கு 20 என்கிற அளவில் உயர்ந்து கொண்டே சென்றது. ஜெய்ஸ்வால் 34 ரன்களில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். ஆனால் துபே நின்று கொண்டிருந்தார்.

அதன் பின்னர் வந்த ஜிதேஷ் ஜீரோவில் அவுட் ஆகி வெளியே சென்றார் அவருக்கு பதிலாக வந்த ரிங்கு சிங் தனது பங்குக்கு அடித்து இறுதியாக வெற்றிக்கு அடிக்கல் நாட்டினார். இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. அதன் காரணமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா எளிதாக வென்று சாதனை படைத்துள்ளது. அடுத்த மூன்றாவது போட்டி ஆறுதல் போட்டியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story