டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணி டாஸ் வென்றது, நியூசிலாந்து பேட்டிங்

டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணி டாஸ் வென்றது, நியூசிலாந்து பேட்டிங்
X
டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் நியூசிலாந்து அணி ஆடுகிறது.



அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற நியூசிலாந்து 2வது இடத்தை பிடித்தது. எனினும், 2019ல் ஒருநாள் உலக கோப்பை, இந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக பைனலுக்கு முன்னேறிய சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல, டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்திலும் இந்தியாவை வென்று நமது அரையிறுதி கனவை தகர்த்தது.

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள நியூசிலாந்து அணி டி20 போட்டிகள் மூன்றிலும், டெஸ்ட் போட்டி இரண்டிலும் விளையாடுகிறது. முதல் டி20 கிரிக்கெட்டு போட்டி ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.

இந்தியா அணியின் கேப்டன் வீராட் கோலிக்கு பதிலாக டி20 கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். அதுபோல இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகினார். புதிதாக இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். இந்த இருவருக்கும் இது முதல் போட்டி


அதுபோல நியூசிலாந்து அணியிலும் கேப் டன் கேன் வில்லியம்சன், போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தீ தலைமையில் களமிறங்கியுள்ளது நியூசிலாந்து அணி.

இந்திய அணி: ரோகித் ஷர்மா (கேப் டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஆர்.அஷ்வின், ஆவேஷ் கான், யஜ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக் வாட், இஷான் கிஷண், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சூரியகுமார் யாதவ்.

நியூசிலாந்து அணி: டிம் சவுத்தீ (கேப் டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், லோக்கி பெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே , டேரில் மிட் செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்ன ர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil