சுவிஸ் ஓபன் பாட்மின்டன்: இந்திய இணை சாம்பியன்...!
சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தடரில் இரட்டையர் பிரிவில் வென்று இந்திய இணை சாதித்துள்ளது. இந்த இணையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் சர்வதேச பாட்மிண்டன் தொடர் நடந்தது. சுவிட்சர்லாந்தில் நடைபெறும் இந்த தொடரை சுவிஸ் ஓபன் என்று அழைக்கிறார்கள். இந்த தொடரில் இந்தியா சார்பில் இரட்டையர்கள் பிரிவில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்த இணை ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை வீழ்த்திக் கொண்டே வந்தது. பிரிவு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்த இணை, அரையிறுதிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும் கனவோடு களமிறங்கியது.
மலேசியாவின் ஆங் யேவ் சின், டியோ ஈ யி ஜோடியை எதிர்கொண்ட இந்திய இணை, அவர்களை 21-19, 17-21, 21-17 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு அந்த இணை தகுதியடைந்தது.
இறுதிப்போட்டியில் இந்திய இணை சீன இணையரை வென்றால் கோப்பையைக் கைப்பற்றலாம் என்கிற நிலைமை. இந்திய அணியை விட மிகவும் பலமான சீன அணியின் வீரர்களை நம்பிக்கையோடு எதிர்கொண்டது நமது அணி. முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் வென்று நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துக் கொண்டது.
இரண்டாவது செட்டை பெறுவதற்கு கொஞ்சம் அதிகமாக போராட வேண்டியிருந்தது. எப்படியாவது வென்றே தீர வேண்டும் எனும் வேட்கை கொண்ட இருவரும் போராடி தன் வசப்படுத்தினர். 24-22 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்று சீன அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய இணை.
ஏற்கனவே பர்மிங்காம் காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள், டோக்கியோ உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றிருந்த இந்த சாத்விக், சிராக் இணை உலக அரங்கில் வெல்லும் 5வது பட்டம் இதுவாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu