நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.
X
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் எஞ்சிய போட்டிகள் எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா வெளியிட்ட தகவலில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!